SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குஜராத்தை தாக்க போகும் வாயு புயல் : பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ; மக்கள் வெளியேற்றம்; பேரிடர் மீட்பு குழுக்கள் விரைவு

906
12/06/2019

அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள ‘வாயு’ புயல் குஜராத் மாநில கரையோரத்தில் நாளை கரையைக் கடக்க வாய்ப்புள்ளதால் அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாயு புயல் காரணமாக இந்திய கடலோர காவல்படை பேரிடர் மீட்பு குழுக்களை அமைத்து தமன், தஹானு மும்பை, முருட்ஜஞ்சிரா, ரத்னகிரி, கோவா கார்வார், மங்களூர், பேப்பூர், விஜின்ஜம் & கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள அனுப்பியுள்ளது. இதனிடையே தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ராணுவ வீரர்கள் குஜராத் மாநிலத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அரசு ஏற்பாடு செய்துள்ள முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுள்ளன. தென் கிழக்கு அரபி கடலில் மீனவர்கள் யாரும் கடலுக்கும் செல்ல வேண்டாம் என்றும், கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்படுள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 31-05-2020

    31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்