SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லியில் 118.4 டிகிரியில் சுட்டெரிக்கும் சூரியன் : இரக்கமற்ற வெப்பத்தால் உ.பி.யில் 4 தமிழர்கள் பலியான அவலம்

848
12/06/2019

டெல்லியில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 118.4 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. வட இந்தியா முழுவதும் அனல் காற்று வீசி வரும் நிலையில் வெயிலும் அதிகமாக இருப்பதால் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.டெல்லியின் பாலம் பகுதியில்தான் இந்த அதிகபட்ச வெயில் பதிவாகி இருக்கிறது. முன்னதாக கடந்த 2014, ஜூன் 9-ம்தேதி 117 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக உலகின் வெப்பமான 15 இடங்களில் 11 இடங்கள் இந்தியாவில் உள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதனிடையே ஆன்மிக சுற்றுலா சென்றுவிட்டு உத்தரப்பிரதேசத்தில் இருந்து கோயம்புத்தூர் திரும்பிக்கொண்டிருந்த தமிழக பக்தர்கள் 4 பேர் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலிலேயே உயிரிழந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 31-05-2020

    31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்