SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வரலாற்றில் முதல் முறையாக இந்திய கடலோர காவல்படை - துணை ராணுவப்படையான அசாம் ரைஃபிள்ஸ் கூட்டுப் பயிற்சி

559
12/06/2019

பாதுகாப்பு படைகளின் வரலாற்றில் முதல் முறையாக, கடந்த மாதம் 22ம் தேதி, ஷில்லாங்கில் முக்கிய உடன்பாடு கையெழுத்தானது. மிகப் பழமையான துணை ராணுவப்படையான அசாம் ரைஃபிள்சும், இந்திய கடலோர காவல்படையும் பாதுகாப்பு பணிகளில் ஒத்துழைப்பதற்கும், அதற்காக இணைந்து பயிற்சி மேற்கொள்வதற்கும் இந்த உடன்பாடு வகை செய்கிறது. பேரிடர் கால மீட்பு பணிகள், எல்லை பாதுகாப்பு பணிகள், கடல் எல்லைகளில் நடக்கும் சட்டவிரோத செயல்களை தடுத்தல் மற்றும் இந்திய வட கிழக்கு பகுதியை பாதுகாக்கும் பணிகள் தொடர்பாக இரு படையும் ஒன்றாக இணைந்து பயிற்சி எடுக்க உள்ளன. இந்த பயிற்சிக்காக, கடலோர காவல் படையில் கிழக்கு மண்டலத்திற்கு சொந்தமான சவ்ரியா கப்பல் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அசாம் ரைபிள்ஸ் படையை சேர்ந்த வீரர்கள் சவ்ரியா கப்பலில் பயிற்சி எடுக்க உள்ளனர். இந்நிலையில், இந்திய கடலோர காவல் படையின் பணிகள் குறித்து அறிவதற்காக, அசாம் ரைபிள்ஸ் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் சென்னையில் உள்ள கடலோர காவல்படை தளத்திற்கு வந்துள்ளனர். இந்திய கடலோர காவல்படையின் செயல்பாடு, பின்பற்றப்படும் வழிமுறைகள், பாதுகாப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்த கலந்துரையாடல், இந்திய கடலோர காவல்படை தலைவர் ராஜேந்திர சிங் மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் சுக்தீப் சங்வான் (sukhdeep sangwan)தலைமையில் நடைபெற்றது.கடலோரப் பகுதிகளில் அசாதாரண சூழல் ஏற்படும்போது அதை எதிர்கொள்வது தொடர்பாக அசாம் ரைஃபிள்ஸ் படைக்கு 15 நாட்கள் தொடர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சென்னை கடலோரப் பகுதிகளில் இந்த பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சியின் தொடக்கமாக சவ்ரியா கப்பலின் மேல்தளத்தில் இரு படைகளின் வீரர்களும் அணிவகுப்பு நடத்தினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-08-2019

    18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-08-2019

    17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flower16

    பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

  • tightropewalker

    நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

  • 16-08-2019

    16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்