SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் பழுதானதால் விபரீதம்: 51 மாடி கட்டிடத்தில் மோதியதில் விமானி பலி!

768
11/06/2019

நியூயார்க்கில் உள்ள மான்ஹாட்டன் நகரில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டரை மேகோர்மேக் என்பவர் இயக்கினார். ஹெலிகாப்டர் பறக்க தொடங்கிய 11 நிமிடத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் அதனை கீழிறக்க விமானி முயன்றார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த அந்த ஹெலிகாப்டர்அருகில் இருந்த 51 மாடி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மேகோர்மேக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக அங்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தைத் தொடர்ந்து குறிப்பிட்ட சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்