SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவில் பெய்து வரும் கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு: திரும்பும் இடமெங்கும் வெள்ளகாடாக காட்சியளிப்பதால் மக்கள் அவதி

715
11/06/2019

சீனாவின் கிழக்குப் பகுதியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளத்தால் தொடர்புகளற்று தனித்து விடப்பட்டுள்ளனர். ஜியாங்சி மாகாணத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ள நிலையில், சுமார் 10,800 ஹெக்டேர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி பயிர்கள் சேதமடைந்துள்ளன. மேலும் திரும்பும் இடமெங்கும் வெள்ளகாடாக காட்சியளிப்பதால், மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வெள்ளப்பெருக்கில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 14 லட்சம் பொதுமக்கள் வெள்ளத்தால் உடமைகளை இழந்து தவித்து வருவதோடு, இந்திய மதிப்பில் சுமார் 2,660 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்