SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

557
27/05/2019

அரசுமுறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் கோல்ப் விளையாடினார்.அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது மனைவி மெலானியா ட்ரம்புடன், 4 நாள் அரசுமுறைப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார்.முன்னதாக ஹெலிகாப்டரில் வந்திறங்கிய அதிபர் ட்ரம்பை வரவேற்ற பிரதமர் அபே, தானே வாகனத்தை இயக்கி மைதானத்துக்கு அழைத்து சென்றார். பின்னர் அங்கு கோல்ஃப் விளையாடிய இருதலைவர்களும் ஒன்றாக செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.அதே வேளையில் அதிபர் ட்ரம்பின் மனைவி மெலானியா ட்ரம்பும், பிரதமர் ஷின்சோ அபேவின் மனைவி ஏக்கி அபேவும், டோக்யோவிலுள்ள டிஜிட்டல் அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.டீம்லேப் பார்டர்லெஸ் என்ற அந்த அருங்காட்சியகத்தில் வண்ண விளக்குகளை பார்வையிட்ட இருவரும், அங்கிருந்த குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • adayaru_makkal_kumbha1

    அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் : பக்தர்கள் சாமி தரிசனம்

  • oranguttan_monkey111

    50வது பிறந்த நாளை பரிசுப் பெட்டிகளுடன் கேக் ருசித்து கொண்டாடிய ஓராங்குட்டான் குரங்கு

  • malai_vangam11196

    196 நாட்களுக்கு பிறகு சென்னையின் பல்வேறு இடங்களில் மழை : வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

  • amerikaa_aathal11

    900 மீட்டர் உயரம் கொண்ட பாறை மீது ஏறி 10 வயது அமெரிக்க சிறுமி அசத்தல்

  • 20-06-2019

    20-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்