SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

1228
22/05/2019

தமிழகத்தையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்து இன்றுடன் ஓராண்டு கடந்துள்ளது. மே 22 தமிழகத்தின் வரலாற்று குறிப்புகளில் எழுதப்பட்ட யுத்தத் தினம். எந்த ஆயுதமின்றி நிராயுதபாணியாக அகிம்சை வழியில் போராடிய தூத்துக்குடி மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் சுவடுகளை தாங்கி நிற்கும் தினம் இன்று. சுற்றுப்புறச் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் எனக்கோரி 99 நாட்கள் அமைதியாக போராடி வந்த தூத்துக்குடி மக்கள், 100வது நாள் அன்று மாதாகோவில் இருந்து ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மாணவி வெனிஸ்டா ஸ்னோலின் உள்ளிட்ட 13 உயிர்கள் மண்ணில் சரிந்தது. துப்பாக்கிச்சூட்டுக்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக தங்களது இன்னுயிரை இழந்த 13 பேரின் நினைவலைகளை சுமந்து நிற்பதாக கூறுகின்றனர் தூத்துக்குடி மக்கள். கொல்லப்பட்ட 13 பேருக்கு நினைவுத் தினம் அனுசரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு இருந்தும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த 47 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-09-2019

    17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • dragan_canadaa

    கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

  • gurgaun_cameraa1

    குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

  • apayin_kuppai11

    ஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்

  • protest_dailymail111

    சீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்