SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லண்டனில் தொடங்கியது மலர் கண்காட்சி : கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ண மலர்களை ராணி எலிசபெத் பார்வையிட்டார்

872
22/05/2019

லண்டனில் தொடங்கிய மலர் கண்காட்சியை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பார்வையிட்டார். செல்சி மலர் கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்காக நேற்று திறக்கப்பட்டது. இதற்கு முன்னதாக, நேற்று அங்கு சென்ற ராணி, தோட்ட பராமரிப்பாளர்களை சந்தித்து பாராட்டு தெரிவித்தார். அத்துடன், பல்வேறு வகையான மலர்கள் மற்றும் மரத்தினால் செய்யப்பட்ட கலைநயமிக்க பொருட்களை கண்டு ரசித்தார். அப்போது மலர்களின் தனித்துவம் குறித்து ஊழியர்கள் எடுத்துரைத்தனர். மேலும், இளவரசர் வில்லியம் மற்றும் அவரின் மனைவி கேத் மிடில்டனும் உடன் சென்றனர். முன்னதாக, அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் அவர்களின் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர்.இதை தொடர்ந்து, தோட்டக்கலை நிபுணர்களுடன் இணைந்து கேத் உருவாக்கிய பூங்காவையும் அரசு குடும்பத்தினர் பார்வையிட்டனர். வசந்த கால மலர் கண்காட்சி எனப்படும், செல்சி மலர் கண்காட்சியானது ஆண்டுதோறும், மே மாதம் நடைபெறும். இந்த மலர் கண்காட்சியை பார்வையாளர்கள் கண்டு ரசித்து வருகின்றனர். செல்சி மலர் கண்காட்சியில் விதவிதமாக அலங்காரம் செய்து வைக்கப்பட்டு உள்ள மலர்கள்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • newyork

    நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

  • singaporebirds

    சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

  • turkey

    துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

  • climate

    ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

  • 25-06-2019

    25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்