SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்!

838
21/05/2019

மும்பை: புல்தானா மாவட்டம் மல்காப்பூர் பகுதியில் உள்ள அனுராபாத் கிராமத்தில் செங்கல் சூளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த செங்கல் சூளையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் நேற்று குடும்பத்துடன் டெம்போ வேனில் அருகில் உள்ள டவுன் பகுதிக்கு சென்றனர். அங்கு தங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு பிற்பகலில் அனுராபாத் கிராமத்துக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். மும்பை- நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது அந்த வழியாக உப்பு மூட்டைகள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அந்த லாரியின் டயர் திடீரென வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி நிலை தடுமாறி செங்கல் சூளை தொழிலாளர்கள் சென்ற டெம்போ வேன் மீது விழுந்து அமுக்கியது. இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வேன் மீது விழுந்த லாரியை கிரேன் மூலம் தூக்கி அகற்றினர். பின்பு அந்த வேனில் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நொறுங்கி கிடந்த டெம்போ வேனில் இருந்து 13 பேரை பிணமாக மீட்டனர். பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • singaporebirds

    சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

  • turkey

    துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

  • climate

    ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

  • 25-06-2019

    25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • bangla_train_crash11

    வங்கதேசத்தில் பாலம் இடிந்து விழுந்ததால் ரயில் கவிழ்ந்து விபத்து : 5 பேர் பலி, 100 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்