SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

846
17/05/2019

ஹாங்காங்: ஆசிய நாடுகளிலேயே முதன்முறையாக ஓரினச்சேர்க்கைக்கு தாய்வான் பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக, ஓரினச்சேர்க்கைக்கு தடைவிதிக்கு அரசின் உத்தரவை எதிர்த்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர், தாய்வானில் பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்ட போராட்டங்களை தொடர்ந்து, அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் ஓரின திருமணத்தை அங்கீகரிக்கும் உத்தரவை கோரி முறையீடு செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கை விசாரித்த அந்நாட்டு உச்சநீதிமன்றம், ஓரினச்சேர்க்கைக்கு அனுமதி அளிக்கும்படி கடந்த 2017ம் ஆண்டு மே மாதம், அரசுகு உத்தரவிட்டது. இந்த நிலையில், இன்று தாய்வான் பாராளுமன்றத்தில் ஓரினச்சேர்க்கையை அனுமதிக்கும் மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது பாராளுமன்றம் முன்பு ஏராளமான எல்.ஜி.பி.டி.யினர் குவிந்திருந்தனர். இதையடுத்து, ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்தை தாய்வான் அங்கீகரிப்பதாக அந்நாட்டு அதிபர் அறிவித்தார். இதனால் எல்.ஜி.பி.டி.யினர் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • singaporebirds

    சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

  • turkey

    துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

  • climate

    ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

  • 25-06-2019

    25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • bangla_train_crash11

    வங்கதேசத்தில் பாலம் இடிந்து விழுந்ததால் ரயில் கவிழ்ந்து விபத்து : 5 பேர் பலி, 100 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்