SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தண்ணீர்!.. தண்ணீர்!.. வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் மகாராஷ்டிரா மாநில கிராமங்கள்..

440
14/05/2019

மகாராஷ்டிரா மாநிலத்தின் சில பகுதிகளில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் அவுரங்காபாத் மாவட்டத்தில், நவ்காவ்ன் கிராமத்தில், குடி தண்ணீருக்காக, பல கிலோ மீட்டர் தூரத்திற்கு பொதுமக்கள் பயணிக்கின்றனர்.தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள கோதாவரி ஆறு, முற்றாக வறண்டு போய்விட்டதால், தங்களுக்கு மட்டுமின்றி, ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கும் கூட தண்ணீர் இல்லை என கவலை தெரிவித்துள்ளனர்.நீர் நிலைகளில் ஊற்றுத் தோண்டினாலும், நீர் கிடைப்பதில்லை என கிராம மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். அதே போல் மகாராஷ்டிரா மாநிலம், தானேவில் உள்ள பல கிராமங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக ஷஹாபூர் மற்றும் நகவோன் கிராம மக்கள் தண்ணீர் பஞ்சத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பகுதிகளில் இருக்கும் தண்ணீர் அனைத்தும் மும்பைக்கு அனுப்பப்படுவதாகவும், குடிக்க கூட நீர் இல்லாமல் அசுத்தமான தண்ணீரை குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் ஷஹாபூர் கிராம மக்கள் தெரிவித்துள்ளானர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-08-2019

    26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்