SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய புல்வெளியில் தீ விபத்து : கரும்புகை சூழ்ந்ததில் மூச்சுத்திணறலால் மக்கள் அவதி

455
14/05/2019

கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே சென்னை குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்திற்கு சொந்தமான 100 ஏக்கர் பரப்பு மைதானத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.இங்கு 45 எம்.எல்.டி. அளவில் கழிவுநீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றும் மையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன; இந்நிலையில் நேற்று மதியம் 2:00 மணிக்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஒரு பகுதி தீ பிடித்து எரியத் துவங்கியது. காற்றின் வேகத்தில் காய்ந்து மண்டிக்கிடந்த புற்களில் பரவிய தீ மளமளவென பச்சை புல்களிலும் பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்து பரபரப்பாக காட்சியளித்தது. அடர்ந்த கரும் புகையால் பேருந்து நிலையத்திற்கு வந்த பயணியர் மற்றும் அதை சுற்றி உள்ள குடியிருப்புவாசிகள் என அனைவரும் மூச்சுத்திணறலால் அவதியடைந்தனர். இதையடுத்து கோயம்பேடு ஜெ.ஜெ.நகர் மதுரவாயல் கே.கே.நகர் அசோக் நகர் என 8க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-08-2019

    26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்