SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

2644
17/04/2019

விழுப்புரம் மாவட்டம் உளூந்தூர்பேட்டையை அடுத்த கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ளது கூத்தாண்டவர் கோயில். ஒவ்வொரு ஆண்டும் இங்கு நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதிலிருந்தும் ஏராளமான திருநங்கைகள் வந்து இந்தத் திருவிழாவில் பங்கேற்றுள்ளனர். சித்திரை பெருவிழாவின் முக்கிய விழாவான, சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது தமிழகம் மட்டுமின்றி மும்பை, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வந்த ஆயிரக்கணக்கான திருநங்கைகள் தங்க, வைர நகைகள், பட்டுப்புடவை அணிந்து அழகு பதுமைகளாக கோயில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்டனர். 2019-ம் ஆண்டுக்கான திருநங்கைகளுக்கான "மிஸ் கூவாகம்" அழகிப் போட்டி கூவாகம் கிராமத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது. இதில், 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டனர். இந்தப்போட்டியில், மிஸ் கூவாகமாக தருமபுரியைச் சேர்ந்த நபீஷா முதலிடம் பிடித்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • newyork

    நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

  • singaporebirds

    சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

  • turkey

    துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

  • climate

    ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

  • 25-06-2019

    25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்