SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி

2149
17/04/2019

உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லக்கூடிய திறன் பெற்ற படகை தயாரித்து சீனா சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த படகின் சோதனை ஓட்டம் வெற்றி அடைந்துள்ளதாகவும், இது தாக்கும் திறன் கொண்ட படகு எனவும் சீனா கூறியுள்ளது. சீன அரசாங்கத்துடன் கைக்கோர்த்துள்ள வுசாங்க் கப்பல் கட்டமைப்பை செய்யும் நிறுவனம், புதிய நீர் ஊர்தியை தயாரிக்கும் பணியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறங்கியது. மேலும் அந்த வாகனத்தை ராணுவ பயன்பாட்டுக்கு ஏற்றவாறு வடிவமைக்க வேண்டும் என வுசாங்க் நிறுவனத்திற்கு, சீன அரசு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் முற்றிலும் மாறுபட்ட திறன் கொண்ட படகு தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தது. இதற்கான பணிகள் முடிவுற்றுள்ள நிலையில், இந்த புதிய தாக்கும் திறன் கொண்ட படகுக்கு மரைன் லிசார்ட் என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் இதற்காக சோதனை ஓட்டத்தை சீன அரசு மேற்கொண்டு வந்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2019

    21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்