SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குருத்தோலை ஞாயிறு: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, குருத்தோலையை கையில் ஏந்தி கிறிஸ்தவர்கள் ஊர்வலம்

585
15/04/2019

குருத்தோலை ஞாயிறையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு பிரார்த்தனையும், ஊர்வலமும் நடைபெற்றது.இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவர்களின் 40நாள் தவக்காலம் நடைபெற்று வருகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு ஜெருசலேம் நகர வீதிகளில் கழுதைக்குட்டியின் மீதேறி ஊர்வலமாகச் சென்ற போது குருத்தோலைகள் மற்றும் மரக்கிளைகளை பிடித்து ஓசன்னா பாடலைப் பாடியபடி மக்கள் அன்புடன் அவரை வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்திடும் வகையில் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்று கிழமையில் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது. சென்னை பெசன்ட் நகரில் குருத்தோலை ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு குருத்தோலையை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் தாமஸ் தேவாலயத்தில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்