SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் தலைப்பாகை தின கொண்டாட்டம் : அமெரிக்கர்களும் அணிந்து மகிழ்ந்தனர்

529
15/04/2019

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில், அங்குள்ள சீக்கியர்கள் நேற்று தலைப்பாகை தினம் கொண்டாடினர். ஆயிரக்கணக்கான மக்களுக்கு வண்ண தலைப்பாகை அணிவித்து சீக்கியர்களின் அடையாளம் பற்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். அமெரிக்காவில் சீக்கியர்கள் பலர் பணியாற்றுகின்றனர். இவர்கள் தலைப்பாகையுடன் சென்றால், அவர்களை சிலர் வித்தியாசமாக பார்ப்பது வழக்கம். இதனால், சீக்கியர்களின் அடையாளம் பற்றி அமெரிக்கர்களுக்கு தெரியப்படுத்த தலைப்பாகை தினம் கொண்டாட அமெரிக்காவில் உள்ள சீக்கியர்கள் முடிவு செய்தனர். முதல் தலைப்பாகை தினம் கடந்த 2013ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நாளில் அமெரிக்காவில் உள்ள சீக்கியர்கள் ஒன்று கூடி, ஆயிரக்கணக்கான வண்ண தலைப்பாகைகளை அமெரிக்க மக்களுக்கும் அணிவித்து, சீக்கியர்களின் அடையாளம் குறித்து பிரசாரம் செய்தனர். நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் தெருக்களில் சென்ற அமெரிக்கர்கள், வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ஆயிரக்கணக்கான வண்ண தலைப்பாகைகள் அணிவிக்கப்பட்டன. அவர்களும் மகிழ்ச்சியுடன் தலைப்பாகை அணிந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்