SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராணுவ அதிகாரிகளுக்கு கீர்த்தி சக்ரா விருதுகளை வழங்கி கவுரவித்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

771
15/03/2019

புதுடெல்லி: வீர சாகசம் புரிந்தவர்களுக்கும் நாட்டைக் காக்கும் கடமையில் உயிர்த்தியாகம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கும் கீர்த்தி சக்ரா மற்றும் சவுரயா சக்ரா போன்ற விருதுகள் நேற்று டெல்லியில் வழங்கப்பட்டன. விருதுகளை ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கி கவுரவித்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். ராணுவத்தில் மிக உயரிய நிலையில், தனிச்சிறப்பான சேவை ஆற்றியதற்காக ராணுவ தளபதி பிபின் ராவத்துக்கு பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்டது. தனவாடே ரவீந்திர பபன் என்ற காவலர் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர், சவுரயா விருதளித்து கௌரவித்தார். 5 தீவிரவாதிகளை போரிட்டு வீழ்த்திய அபிநவ் குமாருக்கும், அமித் குமாருக்கும், லான்ஸ் நாயக் அயூப் அலி உள்ளிட்டோருக்கும் சவுரியா சக்ரா விருது வழங்கப்பட்டது. துணை ராணுவப் படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ராஜேந்திர குமார் என்பவர் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் போரிட்டு வீர மரணம் அடைந்தார். அவரது குடும்பத்தினருக்கு கீர்த்தி சக்ரா விருது அளிக்கப்பட்டது. இதே போன்று வராமா பால் சிங் உள்ளிட்ட வீரர்களின் குடும்பத்தினரும் கீர்த்தி சக்ரா விருது பெற்றனர். சிறப்பாக பணியாற்றி வரும் துஷார் கவுபா உள்ளிட்டோரும் கீர்த்தி சக்ரா விருது பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மற்றும் எல்.கே. அத்வானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-05-2019

    21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • russiabicycle

    ரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு

  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

  • paradechina

    சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

  • buddhapurnima

    புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்