SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மும்பையில் நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு : 34 பேர் படுகாயம்

776
15/03/2019

மும்பையில் ரயில் நிலையம் அருகே இருந்த நடை மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 32பேர் படுகாயம் அடைந்தனர். மும்பையின் மையப்பகுதியான சத்ரபதி சிவாஜி மகராஜா ரயில் நிலையத்தையும், ஆசாத் மைதான் காவல் நிலையத்தையும் இணைக்கும் நடை மேம்பாலம், பழுதாகி இருந்த நிலையில் நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கித் தவித்தவர்களை பல மணி நேரப்போராட்டத்திற்குப் பின்னர் மீட்புக் குழுவினர் மீட்டனர். இப்பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் இணைந்தனர். இடிபாடுகள் அகற்றப்பட்ட பின்னர் காயமடைந்த 32 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-05-2019

    21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • russiabicycle

    ரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு

  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

  • paradechina

    சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

  • buddhapurnima

    புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்