SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமைதிக்கான விருது, காந்தி சிலை திறப்பு : பிரதமர் மோடியின் தென் கொரிய பயண புகைப்படங்கள்

269
22/02/2019

சியோல்: தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் அழைப்பைத் தொடர்ந்து, பிரதமர் மோடி 2 நாள் பயணமாக அந்நாட்டுக்கு நேற்று சென்றார். தலைநகர் சியோல் விமான நிலையத்தில், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சியோலின் யான்செய் பல்கலைக் கழகத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், முன்னாள் ஐநா பொதுச் செயாலளர் பான் கி மூன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் பிரதமர் மோடிபோர் வீரர்கள் தேசிய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.இதைத் தொடர்ந்து, தென்கொரிய அதிபர் மாளிகையான "நீல இல்லம்" சென்ற பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தென்கொரிய அதிபர் மூன்-ஜே-இன், அவரது மனைவி கிம்-ஜங்-சூக் ஆகியோர் பிரதமர் மோடிக்கு வரவேற்பளித்தனர். தென் கொரிய அரசின் அமைதிக்கான விருதை இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-03-2019

    26-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • VeronicaStorm

    ஆஸ்திரேலியாவை மிரட்டி வந்த வெரோனிகா புயல் கரையை கடந்தது

  • vehicletest

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்