SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி

877
22/02/2019

மும்பை, மஹாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் இருந்து, மும்பைக்கு, ஆயிரக்கணக்கான விவசாயிகள், மாபெரும் பேரணியை நேற்று துவக்கினர். மஹாராஷ்டிராவில், முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த ஆண்டு, 'கடன் தள்ளுபடி, பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாயிகளுக்கு பென்ஷன் திட்டம்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர், நாசிக்கில் இருந்து மும்பைக்கு பேரணியாக சென்று, போராட்டம் நடத்தினர். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, மாநில அரசு உறுதியளித்தது. இதுவரை, கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவதாக, விவசாயிகள் சங்கம் அறிவித்தது. நேற்று முன்தினம், மாநில அரசுடன், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் நடத்திய பேச்சு தோல்வி அடைந்தது.இதையடுத்து நேற்று, மார்க்சிஸ்ட் ஆதரவுடன், அகில இந்திய விவசாயிகள் சங்கம், பிரமாண்ட பேரணியை துவக்கியது. நாசிக்கில் இருந்து மும்பை செல்லும் இந்த பேரணியில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து, மாநில அரசு எழுத்து மூலம் உறுதி அளிக்கும் வரை, போராட்டத்தை தொடரப் போவதாக, விவசாயிகள் சங்க தலைவர், அசோக் தாவ்லே கூறினார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • nheru_soniaa11

    நாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினம் : சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி

  • malar_modi12

    2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து

  • peruearthqq1

    பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவு

  • Trump_japan11

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

  • kashmir_kola11

    தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்