SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

564
21/02/2019

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அரளிப்பாறையில் சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஐந்து நிலை நாட்டார்கள் சார்பில் மாசி மகத்தன்று மஞ்சுவிரட்டு வெகுவிமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது. அரளிப்பாறையில் உள்ள பாலதண்டாயுதபாணி கோயில் மாசிமக திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்சியான மஞ்சுவிரட்டில் 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இந்த மஞ்சுவிரட்டு போட்டியை கொழுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மலையில் இருந்தவாறு ஆயிரக்கணக்கானோர் பேர் கண்டு ரசித்தனர். இதனால் மலைகள் முழுவதும் மனித தலைகளாக காட்சியளித்தது. மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் வருகை தந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்