SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு

512
21/02/2019

டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 69-ஆக உயர்ந்துள்ளது. வங்கதேச தலைநகர் டாக்காவில் சவுக்பஜார் பகுதியில் வேதிப்பொருள்கள் சேமிப்பு கிடங்கு உள்ளது. குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள இக்கிடங்கில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்த கிடங்கில் தீப்பிடித்ததால் அந்த தீ இதர பகுதிகளுக்கும் பரவியதாக கூறப்படுகிறது. இதில் குடியிருப்பு வாசிகள் தீயில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்தனர். அந்த நேரத்தில் குடியிருப்பு வளாகம் இருந்த குறுகிய வீதியில் சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதில் தப்ப முடியாமல் சிலர் தீ விபத்தில் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் பல மணிநேரம் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காயம் அடைந்தோரின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்