SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

816
19/02/2019

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பிங்லன் பகுதியில் நேற்று அதிகாலை பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் ராணுவ மேஜர் உள்பட 4 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேஜர் விஎஸ் தவுன்டியால், கான்ஸ்டபிள் சிவராம், சிப்பாய் அஜய் குமார், ஹரி சிங் , ஜம்மு காஷ்மீர் போலீஸ் காவலர் அப்துல் ரஷித்.ஆகியோர் வீர மரணம் அடைந்தனர். காயமடைந்த வீரர் குல்சார் முகமது ஸ்ரீநகரில் உள்ள பாதாம்பிபாஹ் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் உத்தரகாண்டைச் சேர்ந்த மேஜர் விஎஸ் தவுன்டியாலின் இறுதிச் சடங்கு இன்று டேராடூனில் நடைபெற்றது. அப்போது 'பாரத் மாதா கி ஜே', 'மேஜர் தவுன்டியால் என்றும் நிலைத்திருப்பார்', 'பாகிஸ்தான் வீழ்த்தப்படும்' என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.அதைத் தொடர்ந்து ராணுவ மரியாதையுடன் அவரின் உடலை அடக்கம் செய்யும் சடங்குகள் நடைபெற்றன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-03-2019

    26-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • VeronicaStorm

    ஆஸ்திரேலியாவை மிரட்டி வந்த வெரோனிகா புயல் கரையை கடந்தது

  • vehicletest

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்