SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடுக்கடலில் நடமாடும் பல்பொருள் அங்காடி : சுற்றுலா பயணிகளைக் கவர துபாய் புதிய முயற்சி

834
12/02/2019

உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான துபாய்க்கு அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்கள் செல்கிறார்கள். உல்லாசப் படகுகள், கப்பல்கள் மூலம் சுற்றுலாப் பயணிகள் கடலுக்குச் சென்று மக்கள் பொழுதைக் கழிக்கிறார்கள் . இந்நிலையில் கடலில் சுற்றுலா செல்லும் பயணிகளைக் கவர கடல் நடுவே மிதக்கும் பல்பொருள் அங்காடியை Carrefour என்னும் தனியார் நிறுவனம் தொடங்கியுள்ளது. கடலில் கப்பலில் செல்லும் வாடிக்கையாளர்கள் எங்கிருந்தாலும் தங்கள் செல்ஃபோனில் உள்ள Carrefour செயலி மூலம் ஆர்டர் செய்யலாம். ஆர்டர் கிடைத்ததும் உடனே அங்காடியின் பணியாளர்கள் சிறிய அலைச்சறுக்கு படகில் வாடிக்கையாளர்கள் இருக்கும் கப்பலுக்கே சென்று பொருட்களை வழங்குகின்றனர். காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சூப்பர் மார்க்கெட் செயல்படுகிறது. இந்த சூப்பர் மார்க்கெட் சுற்றுலாப் பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.உணவுப்பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் என 300 வகையான பொருட்கள் மிதவை அங்காடியில் கிடைக்கின்றன. கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் வகையில் படகில் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதனால் பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் கடலில் கலக்காமல் பார்த்துக்கொள்கிறார்கள்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-08-2019

    19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-08-2019

    18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-08-2019

    17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flower16

    பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

  • tightropewalker

    நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்