SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கும்பமேளாவில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு ஒரு கோடி பக்தர்கள் புனித நீராடல்

641
11/02/2019

அலகாபாத்: உத்தரப் பிரதேசத்தில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் ஒரு கோடி பக்தர்கள் புனித நீராடினர். உத்தரப் பிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா விழா கொண்டாடப்படுகிறது. கடந்த மாதம் 15ம் தேதி கும்பமேளா தொடங்கியது. கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிங்கும் திரிவேணி சங்கமத்தில் குளித்தால் பாவங்கள் நீங்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. எனவே, கும்பமேளாவின் போது திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சரஸ்வதி தேவி தோன்றிய நாளாக கருதப்படும் வசந்த பஞ்சமியான நேற்று, கும்பமேளாவின் மூன்றாவது முக்கிய புனித நீராடல் நடைபெற்றது. சூரிய உதயத்துக்கு முன்னர் வரை 50 லட்சம் பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். பக்தர்கள் புனித நீராடுவதற்கு வந்த வண்ணம் இருந்தனர். நேற்று மட்டும் ஒரு கோடி பக்தர்கள் நீராடினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

  • cleb_11_kri

    கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்