SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மற்ற நாட்டு பொருட்கள் தங்கள் நாட்டுக்குள் வராதவாறு எல்லையை மறித்துள்ள வெனிசுலா அதிபர் மதுரோ: மக்கள் அவதி!

1628
08/02/2019

மற்ற நாடுகளின் உணவு உள்ளிட்ட உதவிப்பொருட்கள் தங்கள் நாட்டுக்குள் வராத வண்ணம், கொலம்பியா எல்லையில் அமைந்துள்ள இணைப்பு பாலத்தில் வழியை மறிக்கும் விதமாக 3 லாரிகளை வெனிசுலா அரசு நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெனிசுலாவில், கடும் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டு, உணவுப்பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு உதவும் வகையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உணவு மற்றும் முக்கிய மருந்து பொருட்களை அனுப்பி வருகிறது. ஆனால் வெனிசுலாவில் உணவுத் தட்டுப்பாட்டை அடியோடு மறுக்கும் அந்நாட்டு அதிபர் மதுரோ, வெனிசுலா மக்கள் பிச்சைக்காரர்கள் இல்லை என்றும், அவற்றை நாட்டுக்குள் விடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். இதற்கேற்ப எல்லையில் வழியை மறிக்கும் விதமாக 3 லாரிகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

  • cleb_11_kri

    கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்