SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

843
23/01/2019

பெங்களூரு: கர்நாடக மாநிலம், துமக்கூரு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சித்தகங்கா மடத்தின் ஜீயராக பொறுப்பு வகித்து வந்தவர் சிவகுமார சுவாமி. இவர் கடந்த 1941ம் ஆண்டில் இருந்து துமக்கூரு சித்தகங்கா மடத்தின் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். வயோதிகம் சார்ந்த பிரச்சனைகளால் அவரது உடல்நிலையில் திடீரென்று பின்னடைவு ஏற்பட்டது. இதனால் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி நேற்று காலை 11.40 மணியளவில் தனது 111வது வயதில் காலமானார். இதைத் தொடர்ந்து, அவரது உடல் சித்தகங்கா மடத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. கர்நாடக முதல்வர் குமாரசாமி, நிர்மலா சீதாராமன், முன்னாள் முதல்வர் சதானந்தா கவுடா, எடியூரப்பா ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும், நடமாடும் தெய்வம் என்று போற்றப்பட்ட சிவகுமார சுவாமிகள் உடலுக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • china23

    சீனாவின் வுலியன் அருங்காட்சியத்தில் நடைபெற்ற கலாச்சார நினைவுச் சின்னங்களின் கண்காட்சி: புகைப்படங்கள்

  • 23-08-2019

    23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்