SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜம்மு காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

780
08/02/2019

குல்காம்: ஜம்மு காஷ்மீரில் கடுமையாக பனி பொழிந்து வருகிறது. கடுமையான பனிப்பொழிவு காரணமாக ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை 2-வது நாளாக மூடப்பட்டுள்ளது. சாலைகளில் பனிக்கட்டிகள் மலைபோல் குவிந்து கிடப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சாலைகளில் குவிந்துள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் அம்மாநில அரசு ஈடுபட்டுள்ளது. ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொடர் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பனிச்சரிவும் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள 22 மாவட்டங்களில் 16 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பனிச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

  • russiatomatofight

    ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

  • yamunariver20

    கரைபுரண்டோடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்