SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மும்பை பாணியில் கென்யா ஓட்டலில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதல்: இதுவரை 21 பேர் உயிரிழப்பு!

1145
17/01/2019

நைரோபி: கென்யா நாட்டு தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள ஓட்டலில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் சிலர் அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தினர். ஓட்டல் வளாகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரிந்து சென்ற அவர்கள், துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தினர். தற்கொலைப்படை தாக்குதலும் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஓட்டல் வளாகத்தின் வெளியே நிறுத்தப்பட்ட வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. பயங்கரவாதிகள் தாக்குதலை அடுத்து, அங்கு விரைந்த போலீசார், ஓட்டலில் இருந்தவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசார் சுற்றி வளைத்ததும், பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து அவ்வப்போது தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு போலீசார் பதிலடி கொடுத்தனர். சுமார் 20 மணி நேரம் நடந்த இந்த சண்டை நேற்று காலை முடிவுக்கு வந்தது. இதில், அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 14 பேர் கொல்லப்பட்டதாக முதலில் அறிவிப்பு வெளியானது. அதன்பின்னர், மீட்பு பணியை தொடங்கியபோது, மேலும் 7 உடல்கள் மீட்கப்பட்டன. இதன்மூலம் உயிரிழப்பு 21 ஆக உயர்ந்தது. தாக்குதல் நடத்திய 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். பலத்த காயங்களுடன் 28 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

  • thaaymoli_thinam12

    உலக தாய் மொழி தினம் : தமிழ் வழி கல்வியை வலியுறுத்தி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

  • BeijingPalacelight

    வண்ண விளக்குகளால் ஜொலித்த பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகம்

  • mumbai_vivasayigal11

    மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்