SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழக கேரள எல்லையில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே உயரமான சிவலிங்கம்

2259
11/01/2019

தமிழக கேரள எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சிவலிங்கம் உலகிலேயே உயரமான சிவலிங்கம் என்ற பெருமையுடன் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லைப் பகுதியான உதயம்குளம்கரையில் செங்கல் மஹேஸ்வர சிவபார்வதி கோயில் உள்ளது. இங்கு 111.2 அடியில் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கத்தை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் இந்த சிவலிங்கத்தில், மொத்தம் எட்டு நிலைகள் உள்ளன. ஒவ்வொரு நிலையிலும் தியான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குகைக்குள் செல்வது போன்றும் பரசுராமர் அகத்தியர் உட்பட பல முனிவர்கள் தவம் செய்வது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இந்த சிலை இடம் பெற்றுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

  • 22-01-2019

    22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்