SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விலங்குகளின் உடல்களை பதப்படுத்தி அசத்தும் கலைஞர்: உயிரோடு இருப்பது போலவே காட்சியளிப்பதால் ஆச்சரியம்!

1653
11/01/2019

பாடம் செய்தல் என்பது ஆங்கிலத்தில Taxidermy என்று அழைக்கப்படுகிறது. இந்த சொல் கிரேக்க மொழியில் இருந்து வந்தது. கிரேக்க மொழியில் இந்தச் சொல்லுக்கு தோல் போர்த்தல் என்ற பொருள்படும். இது ஒரு கலையாகும். விலங்குகளின் உடலை காட்சிப்படுத்த அதன் தோலை உறித்து பாடம் செய்து வைத்தலாகும். அக்காலத்தில் வேட்டையாடிய காட்டு விலங்குகளை இவ்வாறு பாடம் செய்து தனிநபர்கள் காட்சிப்படுத்தினர். தற்காலத்தில் அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்த அல்லது ஆய்வு நோக்கோடு விலங்கு இனங்களை அடையாளம் காண பாடம் செய்யப்படுகிறது. தற்கால செல்வந்தர்கள் தங்கள் செல்லப்பிராணிகள் இறந்தால் அதை பிரிய மனமின்றி அதன் உடலை பதப்படுத்தி வைக்க இவ்வாறு செய்கின்றனர். இவ்வாறு பாலூட்டிகள், பறவைகள், மீன்கள், ஊர்வன, நீர்நில வாழ்வன ஆகியவன பாடம் செய்யப்படுகின்றன. விலங்குகளை பாடம் செய்பவர் டாக்சிடெர்மிஸ்ட் என அழைக்கப்படுகிறார்கள். அதனடிப்படையில், கலைஞர் மற்றும் இயற்கைவாதியான டாக்சிடெர்மிஸ்ட் ஸ்டெபானி பார்ட்ஸ், பிரான்ஸின் போர்டியாவில் உள்ள அவரது பட்டறையில் விளங்குகளின் தோல்களை பதப்படுத்தி அதற்கு தற்போது வடிவம் கொடுத்துள்ளார். அந்த விளங்குகள் அனைத்தும் உயிரோடு இருப்பது போலவே காட்சியளிப்பதால் ஆச்சரியம் அளிக்கிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

  • 22-01-2019

    22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்