SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கங்கை நதியில் இருந்து நேரடியாக காசி விஸ்வநாதர் கோயில் செல்வதற்காக இடிக்கப்படும் வீடுகள்: பொதுமக்கள் கவலை

695
10/01/2019

இந்தியாவின் பழமைவாய்ந்த வாரணாசி நகரில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் வழிபட, பக்தர்கள் அங்கு வெள்ளமெனத் திரள்வர். மாண்டோருக்கு இறுதிச் சடங்குகளைச்செய்யவும் பல இந்துக்கள் அங்கு செல்வது வழக்கம். ஆனால், 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்தக் கோயிலைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் இப்போது தரைமட்டமாக்கப்படுகின்றன. கங்கை ஆற்றின் கரையில் அமைந்துள்ள அந்த நகரில், ஆற்றிலிருந்து ஆலயத்திற்கு நேரடிப் பாதையைக் கட்டுவதற்காக வீடுகள் இடிக்கப்படுகின்றன. சுமார் 300 வீடுகளை இடிப்பது திட்டம். இடிக்கப்படும் சில வீடுகள் கோயிலைப் போலவே பழமை வாய்ந்தவை. மேலும், வீடுகளை இடித்து அகலமான பாதையைக் கட்டுவதால் வாரணாசியின் புகழ்பெற்ற குறுகிய சந்துகள் அழிந்துபோகின்றன என்று உள்ளூர்வாசிகள் சாடியுள்ளனர். 85,000 டாலர் செலவிலான இந்தக் கட்டுமானத் திட்டத்தால் நகரின் அடையாளமும் அழிந்துபோகக்கூடும் என்று அவர்கள் கருதுகின்றனர். பாதிப்படைந்தோருக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு வேறு இடங்களில் வீடுகள் வழங்கவும் அதிகாரிகள் முன்வந்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

  • 22-01-2019

    22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்