SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

1359
14/12/2018

பிரேசில், வெனிசுலா, கொலம்பியா, பெரு, ஈக்வடார் மற்றும் பொலிவியா ஆகிய 6 நாடுகளில் பரவலாக அமைந்துள்ள அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் பிரேசிலில் மட்டும் 453 சட்டவிரோத சுரங்கங்கள் தோண்டுப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரேசிலில் உள்ள அமேசான் மழைக்காடுகளில் அடிமை போல் கொண்டுவரப்படும் ஆட்கள் அங்கு சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் இணைந்து அந்நாட்டு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருந்த 2 சுரங்கங்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். போலீசாரின் ஹெலிகாப்டரை கண்டதும் தொழிலாளர்கள் தப்பியோடியதை அடுத்து சுரங்கங்களை போலீசார் மூடுயுள்ளனர். மேலும், சுரங்ம் தோண்டுவதற்காக அங்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் போலீசார் தீயிட்டு அழித்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்