SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகிலேயே மிகப்பெரிய புத்தர் சிலைக்கு புத்துணர்வு தரும் வகையில் பராமரிப்பு பணிகள் துவக்கம்

1169
14/12/2018

விதவிதமாக பல நிலைகளில் புத்தர் சிலைகள் சீனா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தார் போல ஒரு சிலை சீனாவில் இருக்கிறது. அச்சிலைதான் உலகிலேயே மிகப் பெரிய புத்தர் சிலையாகும். 233 அடி உயரமும் 92 அடி அகலமும் கொண்ட புத்தர் சிலை சீனாவில் இருந்த தாங்க் வம்ச காலத்தில் மின்சியாங் ஆற்றங்கரையில் இந்த புத்தர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் லெஷான் நகரில் உள்ள இச்சிலை, உலக சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. தி லேசன் ஜெயண்ட் புத்தர் என்று அழைக்கப்படும் இச்சிலையை உலகின் பாரம்பரியச் சின்னமாக 1996 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அறிவித்தது. புத்தர் மாமலை போன்றவர். அதனால்தான் இந்த புத்தர் மாமலை போல உருவாக்கப்பட்டுள்ளார் என்று சீன மக்கள் புத்தரைப் போற்றுகின்றனர். அக்டோபர் 8 ஆம் தேதி முதல் இங்கு பராமரிப்புக்கு உட்படுத்தபட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaneer_laari_kudam11

    குடிநீர் பஞ்சம் எதிரொலி : 'குடம் இங்கே, தண்ணீர் எங்கே?’.. தமிழக அரசை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்

  • kali_dogsa1

    கலிபோர்னியாவில் அழகற்ற நாய்களுக்கான போட்டி : 19 நாய்கள் பங்கேற்பு

  • firoilsuthigari11

    அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 2 நாட்களாக பற்றி எரிந்த தீ : மாபெரும் போராட்டத்திற்கு பின் அணைப்பு

  • 24-06-2019

    24-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-06-2019

    23-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்