SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் : உலக நோய்த்தாக்க வரலாற்றில் 2வது மிகப்பெரிய பேரழிவு

1424
13/12/2018

வரலாற்றில் 2வது மிகப்பெரிய பேரழிவாக காங்கோவின் எபாலா (Ebola) நோய்த்தாக்கம் பதிவாகி உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கோவில் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 426ஆக உயர்ந்திருப்பதாகவும், கடந்த மாதம் வரை 198 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எபோலா நோய்த்தாக்கத்தால் காங்கோவின் சுகாதார நிலை தற்போது கேள்விக்குறியாகி உள்ளதாகவும், உலக நோய்த்தாக்க வரலாற்றில் 2வது மிகப்பெரிய பேரழிவாக காங்கோவின் எபோலா பரவல் பதிவாகி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.முன்னதாக, மேற்கு ஆஃப்ரிக்காவில் கடந்த 2014 முதல் 2016ஆம் ஆண்டு வரை 11,000க்கும் மேற்பட்டோர் எபோலா நோய்த்தாக்கத்தால் உயிரிழந்ததே உலகின் மிகப்பெரிய பேரழிவாக திகழ்வது குறிப்பிடத்தக்கது

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்