SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாடாளுமன்றத் தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள்: வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி

503
13/12/2018

நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் கடந்த நிலையில், அதன் மாறாத வடு மட்டும் இந்தியர்களின் மனதில் இன்றும் ரணமாக உள்ளது. 2001ம் ஆண்டு, டிசம்பர் 13ம் தேதி ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த 5 தீவிரவாதிகள் நாடாளுமன்ற வளாகத்தில் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் டெல்லி காவல்துறையை சேர்ந்த 6 பேர், நாடாளுமன்ற பாதுகாப்பில் இருந்த 2 வீரர்கள், ஒரு தோட்டக்காரர் என 9 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய 5 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். நாடாளுமன்ற தாக்குதல் தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த 9 பேரின் உருவப்படங்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன. எனவே பல்வேறு தலைவர்கள், மக்கள் பிரதினிதிகளை காக்க இன்னுயிரை நீத்த பாதுகாப்பு படை வீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்