SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரேசில் தேவாலயத்தில் வழிபாடு நடத்துவது போல் வந்த ஒருவன் துப்பாக்கிச்சூடு: 4 பேர் உயிரிழப்பு

417
13/12/2018

பிரேசிலில் தேவாலயத்தில் வழிபாடு நடத்துவது போல் மேசையில் அமர்ந்திருந்த ஒருவன், திடீரென துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். கேம்பினாஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் வழிபாடு நடந்து கொண்டிருந்தது. அப்போது அனைவரும் கண்களை மூடி வழிபட்டுக் கொண்டு இருக்கையில் திடீரென ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த இரு துப்பாக்கிகளை எடுத்து சரமாரியாக சுட்டான். இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமுற்றனர். தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார் அவனை சுற்றிவளைத்தனர். அப்போது அவன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்தான். விசாரணையில் அவன் யுலர் பெர்னாண்டோ காண்டோல்போ என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவன் என்பதும் தெரிய வந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்