SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேதார்நாத்தில் கடும் பனி பொழிவு: உறைபனியில் மூடப்பட்ட கேதார்நாத் கோயில்

614
12/12/2018

கேதார்நாத்தில் கடும் பனி பொழிவு. இதையடுத்து சிவபெருமானின் 12 வகையான ஜோதிர் லிங்க இல்லங்களில் ஒன்றாக கருதப்படும் கேதார்நாத் கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலம் இமயமலைத் தொடரில் மந்தாகினி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் குளிர்காலத்தையொட்டி கடந்த 8-ந் தேதி முதல் மூடப்பட்டுள்ளது. சாம்பலும், காட்டு மலர்களையும் கொண்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் அங்குள்ள சிவலிங்கம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் ஏற்றி உகிமாத்தில் உள்ள ஓம்காரேஷ்வர் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிவலிங்கம் சிலை உகிமாத்திற்கு நவம்பர் 11-ஆம் தேதி காலை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கடுங்குளிரையும் பொருள்படுத்தாமல் மனஉறுதியுடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூஜையில் பங்கேற்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்