SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இயற்கை காட்சிகளை உள்ளிருந்து ரசிக்க வைக்கும் வகையில் ஷிம்லா-கல்கா வரை கண்ணாடி மேற்கூரை கொண்ட ரயில்!

528
12/12/2018

ஹிமாச்சல பிரதேசத்தில் முற்றிலும் கண்ணாடியால் ஆன ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் இருந்து ஹரியானா மாநிலம் கல்கா இடையே 96கிமீ தூரத்திற்கு இயக்கப்படும் இந்த மலை ரயில், யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் குளிர் ஊட்டப்பட்ட இந்த ரயிலில் கண்ணாடிப் பொருத்தப்பட்டுள்ள புதிய வகை பெட்டி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பெட்டியில் பயணிக்க பெரியவர்களுக்கு ரூ.130 குழந்தைகளுக்கு ரூ.75 என ரயில்வே நிர்வாகம் கட்டணம் நிர்ணயித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் பெட்டியில் ஒரே நேரத்தில் 36 பேர் பயணிக்க முடியும். மலைப் பிரதேசப் பாதையில் செயல்படும் இந்த ரயிலில் இருந்து 360 டிகிரி கோணத்தில் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா தளங்களை இணைக்கக் கூடிய ரயில் சேவைகளில் இது போன்ற கண்ணாடி பெட்டிகளை இணைப்பது குறித்து ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்