SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இத்தாலி இரவு விடுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

469
10/12/2018

இத்தாலியில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் அட்ரியாட்டிக் கடற்கரை நகரமான அங்கோனா அருகே உள்ள ஒரு இரவு விடுதியில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ராப் பாடகர் சிபேரா எபஸ்தாவின் கச்சேரியைக் கண்டுகளிப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். அப்போது, திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டதால், முண்டியடித்துக்கொண்டு வெளியேற சிலர் முயற்சித்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு சிலர் கீழே விழுந்தனர். அவர்களை கவனிக்காமல் மற்றவர்களும் எழுந்து அரங்கை விட்டு வெளியேறியதில், அடிபட்டும் மிதிபட்டும் 6 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். நிகழ்ச்சியின் போது சிலர் மிளகு ஸ்பிரேயே அடித்ததே நெரிசலுக்கு காரணமென போலீசார் தெரிவித்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

  • 22-01-2019

    22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்