SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சமையல் வீடியோக்கள் மூலம் உலகை ஈர்த்த 107 வயது மஸ்தானம்மா பாட்டி காலமானார்

2029
06/12/2018

கிராமத்து சமையலை மணக்க வைத்து, லட்சக்கணக்கானவர்களை அதன் ருசிக்கு அடிமையாக்கி உலகப் பிரபலமான கிராமத்து சமையல் பாட்டி 107வது வயதில் காலமானார். குக்கிராமம் ஒன்றில் ஏழை விவசாய கூலி குடும்பத்தில் பிறந்தவர் மஸ்தானம்மா(107). இவருக்கு 11வது வயதில் திருமணம் நடந்துள்ளது. இவருக்கு 25 வயது ஆனபோது அவரது கணவர் இறந்துவிட்டார். சமையல் தொழிலை செய்ய ஆரம்பித்த அவர் ஒரு சில ஆண்டுகளிலேயே ருசியான உணவு சமைத்ததன் மூலம் சமையல் வல்லுனராக மாறினார். இதையறிந்த அவரது பேரன் லட்சுமண், கன்ட்டிரி ஃபுட் என்ற பெயரில் 2016ம் ஆண்டில் யுடியூபில் தொடங்கினார். அதன் மூலம் பாட்டி மஸ்தானம்மாவின் நாட்டுப்புற சமையல் உலகம் முழுவதும் உள்ளவர்களை அடிமையாக்கியது. தற்போது அந்த சேனலுக்கு 12 லட்சத்திற்கும் மேற்பட்ட நிரந்தர பார்வையாளர்கள் உள்ளனர். கடந்த 6 மாதங்களாக வயது முதிர்வு காரணமாக உடல் நலிவுற்ற மஸ்தானம்மா இறந்தார். அவரது இறப்பு, சமையலை நேரடியாக ருசித்தவர்களை மட்டும் அல்லாது கன்ட்டிரி ஃபுட் சேனல் மூலம் அவரது சமையலை பின் தொடர்ந்த லட்சக்கணக்கானவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-07-2019

    19-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • japan_animsehan11

    ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி

  • wax_giant_pics

    மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

  • church_cathdral11

    நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

  • apolo_50vinkalam1

    நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்