SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகாராஷ்டிராவில் 100 ஆண்டுகள் பழமையான பாலம் வெடி வைத்து தகர்ப்பு!

830
05/12/2018

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தானேவில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின்போது கலு நதியின் குறுக்கே இரண்டு சிறிய மலைகளை இணைத்து பாலம் கட்டப்பட்டது. ஷகாபூர்- முராத் தாலுகாக்களை இணைக்கும் இந்த பாலம் 100 ஆண்டுகள் பழமையானது. இந்த பாலம் கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக சேதமடைந்தது. கடந்த ஆண்டு மிகவும் மோசமானதால் இந்த பாலம் அபாயகரமான பாலம் என அறிவிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு தகுதியில்லாத நிலையில் இருந்தது. இதையடுத்து பொதுமக்களின் நலன் கருதி கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. பாலம் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டிருந்ததால் நதியை சுற்றி போகும் நிலை இருந்து வந்தது. இந்நிலையில் இந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட பொதுப்பணித்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி பாலத்தின் அனைத்து பகுதிகளிலும் சக்திவாய்ந்த வெடிகள் பொருத்தப்பட்டு ஒரே சமயத்தில் வெடிக்கச் செய்யப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • russia_anumin111

    ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்

  • largestpotato

    உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்

  • marsgobi_desert1

    செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

  • jetairweys_delli11

    வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி, டெல்லி, மும்பையில்ஜெட்ஏர்வேஸ் ஊழியர்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்