SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெயலலிதா 2ஆம் ஆண்டு நினைவுதினம்: ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி

740
05/12/2018

தமிழகத்தின் முதல் பெண் எதிர்கட்சித்தலைவர்; நாடாளுமன்ற உறுப்பினர்; 5 முறை தமிழக முதல்வர் என அரசியல் உலகில் ஆதிக்கம் செலுத்திவந்தவர் ஜெயலலிதா. திரையுலகில் தன் வாழ்க்கைப்பயணத்தைத் தொடங்கியவர், மொத்தம் 115 படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆருடன் மட்டும் 28 படங்களில் நடித்துள்ளார். திரையுலகில் கொடிக்கடிப்பறந்த ஜெயலலிதாவை கைப்பிடித்து அரசியலுக்கு கொண்டுவந்து, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்து அழகுபார்த்தவர் எம்.ஜி.ஆர். அவர் மறைவுக்குப் பிறகு, 1991-ம் ஆண்டு முதன்முறையாக தமிழக முதல்வராகப் பதவி ஏற்றார். 5முறை தமிழக முதல்வராக இருந்த அவர், கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி, உயிரிழந்தார். இந்நிலையில், அவரது இரண்டாம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே இருந்து அ.தி.மு.க. சார்பில் பிரமாண்ட பேரணி தொடங்கியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அ.தி.மு.க மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கருப்பு சட்டை அணிந்து பேரணியில் பங்கேற்றனர். வாலாஜாசாலை, சேப்பாக்கம் வழியாக ஜெயலலிதா நினைவிடம் நோக்கி பேரணி சென்றது. அங்கு பல வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

  • largebudhastatue

    உலகிலேயே மிகப்பெரிய புத்தர் சிலைக்கு புத்துணர்வு தரும் வகையில் பராமரிப்பு பணிகள் துவக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்