SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வியட்நாமில் தேசிய சபை தலைவர் நிகுயென் தி கிம் நிகானுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

380
20/11/2018

ஹனோய் : ஆறு நாட்கள் வியட்நாம் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுளார். அவருடன் மத்திய அரசின் உயரதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது. வியட்நாம் நாட்டில் உள்ள கடலோர நகரமான டா நாங் நகரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குவாங் நாம் நகருக்கு சென்ற ராம்நாத் கோவிந்த், கி.பி. நான்காம் நூற்றாண்டில் சம்பா வம்சத்தை சேர்ந்த மன்னர்களால் உருவாக்கப்பட்ட மை சன் கோவில்களையும், கோபுரங்களையும் பார்வையிட்டார். 3ம் நாளான இன்று தேசிய சபை தலைவர் நிகுயென் தி கிம் நிகானை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து ஹனோயில் உள்ள போர் வீரர்கள் மற்றும் தியாகிகள் நினைவுச் சின்னத்தில் ராம்நாத் கோவிந்த் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். நாளை வரை வியட்நாமில் தங்கும் ராம்நாத் கோவிந்த், அந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல்வேறு தலைவர்களை சந்தித்து இருநாடுகளுக்கிடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்