SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

303
19/11/2018

அமெரிக்காவின் சில மாநிலங்களில் கோடைக்காலங்களில் திடீரென்று காடுகள் தீபிடித்து எரிந்து குடியிருப்பு பகுதிகளுக்கும் தீ பரவுவதால் பல்லாயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கலிபோர்னியா மாநிலத்தின் சியேர்ரா நெவேடா மலையடிவாரத்தில் சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ அம்மாநிலத்தின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளையும், அருகாமையில் உள்ள குடியிருப்புகளையும் சூழ்ந்துள்ளது. கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீயால் அப்பகுதிகளில் கடும் புகை மூட்டமாக உள்ளது. இதனால் தீயை அணைப்பது மீட்பு படையினருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. தீயில் வீடுகளை இழந்த பலர் குடும்பம் குடும்பமாக கார்கள் மூலம் தொலைவான இடத்துக்கு சென்று காருக்குள் தூங்கியபடி வாழ்ந்து வருகின்றனர். மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் காற்றுக்கு இடையில் சுமார் 600 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஆக்ரோஷமாக கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் இரவும் பகலுமாக ஈடுபட்டு வருகின்றனர்.அதிகம் பாதிக்கப்பட்ட பாரடைஸ் நகரில் எரிந்த வீடுகளை அவர் சென்று பார்வையிட்டார். உடைமைகளை இழந்த மக்களுக்கு ஆறுதல் கூறிய டிரம்ப், தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வரும் வீரர்கள், போலீசார், அரசியல் தலைவர்கள், காணாமல் போனவர்களை தேடும் குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள் ஆகியோரின் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்