SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

772
15/11/2018

ஸ்ரீஹரிக்கோட்டா: இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்பட்ட அதிநவீன தகவல் தொழில்நுட்ப செயற்கைகோளான ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. திட்டமிட்டப்படி மாலை சரியாக 5.08 மணிக்கு இஸ்ரோ இதனை விண்ணில் செலுத்தியது. இங்கிலாந்து நாட்டின் இரண்டு செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி சி-42 ராக்கெட் உதவியுடன் கடந்த செப்டம்பர் மாதம் இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இதற்கான கவுன்டவுன் நேற்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது. இந்த செயற்கைகோளானது 3,423 கிலோ எடை கொண்டதாகும். இந்த செயற்கைகோள் அதிநவீன திறன்கொண்ட தகவல் தொழில்நுட்பம், காஷ்மீர் போன்ற மலைபகுதிகள், அடர்ந்த காட்டுப்பகுதிகளில் தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது, துல்லியமாக படங்களை எடுப்பது, ஆப்டிக்கல் தொலைதொடர்பு உள்ளிட்ட சேவைகளுக்கு பயன்படுகிறது. இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ராக்கெட் இஸ்ரோவின் மைல் கல்லாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்