SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் : சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது

443
14/11/2018

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. முருகப்பெருமானின் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 8-ந் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக, சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி கடற்கரையில் நேற்று நடைபெற்றது. முதலில் யானை முகம் கொண்ட தாரகாசுரனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்தார். அதனைத் தொடர்ந்து சிங்கமுகம் கொண்ட சூரன் பின்னர் தன் முகம் கொண்ட சூரபத்மனையும் வேல் கொண்டு சம்ஹாரம் செய்தார்.தொடர்ந்து மாமரமாகவும், சேவலாகவும் வந்த சூரபத்மனை வதம் செய்து சேவலை தனது கொடியாகவும், மாமரத்தை மயிலாகவும் மாற்றி சுவாமி ஜெயந்திநாதர் தன் வாகனமாக ஆட்கொண்டார். இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். இன்று இரவு சுவாமிக்கும், தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Trump_japan11

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

  • kashmir_kola11

    தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

  • 20aacident_died11

    சூரத்தில் கல்வி பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து: 20 பேர் பரிதாப பலி

  • 27-05-2019

    27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்