SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சத்தீஸ்கர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புடன் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்

463
12/11/2018

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்டமாக 18 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் உள்ள 10 தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. மீதமுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் 18 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு சத்தீஸ்கரில் இன்று தொடங்கியது. பஸ்தார், பிஜப்பூர், தண்டேலாடா உள்பட நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களில் தேர்தல் நடப்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவுக்காக துணை ராணுவத்தினர், போலீசார் என சுமார் ஒரு லட்சம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பலத்த பாதுகாப்புக்கு இடையே காலை முதல் மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வமுடன் வந்து தங்களது ஓட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • milkashake1111

    பிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்