SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கலிபோர்னியாவில் உள்ள மதுபான விடுதியில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு: 13 பலி, பலர் படுகாயம்

539
08/11/2018

தவுசண்ட் ஓக்ஸ்: கலிபோர்னியாவில் உள்ள மதுபான விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் மக்கள் கூடும் இடங்களில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஒரு மதுபான விடுதியில் புகுந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தவுசண்ட் ஓக்ஸ் நகரில் உள்ள பார்டர்லைன் பாரில் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு இந்த தாக்குதல் நடந்துள்ளது. பாருக்குள் இருந்தவர்கள் மீது சுமார் 30 ரவுண்டுகள் சுடப்பட்டதாகவும், இதில் 13 பேர் பலியாகியுள்ளதாகவும், பலர் பலத்த காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் குறித்து தகவலறிந்த போலீசார் அந்த பாரை சுற்றி வளைத்தனர். பொதுமக்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-04-2019

    22-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்