SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆஸ்திரேலியாவில் நிகழ்த்த அதிர்ச்சி சம்பவம் : 110 கி.மீ வேகத்தில் 90 கி.மீ தூரத்திற்கு ஓட்டுநர் இன்றி ஓடிய சரக்கு ரயில்

574
08/11/2018

ஆஸ்திரேலியாவில், மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில், 90 கிலோ மீட்டர் தூரத்திற்கு, ஓட்டுநர் இன்றி சரக்கு ரயில் ஓடிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆஸ்திரேலியாவின் கனிம உற்பத்தி நிறுவனமான BHPக்குச் சொந்தமான, அந்த சரக்கு ரயில், 268 பெட்டிகளில் இரும்பு தாதுவை ஏற்றிக் கொண்டு புறப்படத் தயராக இருந்தது.அப்போது, ரயில் ஓட்டுநர், வழக்கமான ஆய்விற்காக, தனது பெட்டியிலிருந்து கீழே இறங்கியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில், திடீரென ஓட ஆரம்பித்த ரயில், ஒரு கட்டத்தில் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கத் தொடங்கியது. ஓட்டுநர் இன்றி, 90 கிலோ மீட்டர் தூரம் சென்ற ரயிலை, பாதுகாப்பாக நிறுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் வீணாகின. இதையடுத்து, , தடம்புரள வைப்பதே சரியானது என அதிகாரிகள் கணித்தனர்.இதையடுத்து, ஹெட்லாண்டு என்ற துறைமுக நகரை நெருங்கும் முன் பில்பாரா பகுதியில், அதனை தடம் புரள வைத்தனர்... ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்டவாளத்தை உடைத்துக்கொண்டு பாய்ந்த சரக்கு ரயில், பின்னர் ஒருவழியாக தடம்புரண்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்